தித்திக்கும் சுவையில் பால் கேசரி.., இலகுவாக செய்வது எப்படி?
கேசரி என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பால் கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்- தேவையான அளவு
- முந்திரி- 10
- ரவை- ½ கப்
- பால்- ½ கப்
- உப்பு- 1 சிட்டிகை
- சர்க்கரை- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் பால் சேர்த்து கலந்து ரவை வெந்து வரும்வரை கிளறவும்.
இதற்கடுத்து நினைக்க கெட்டியாகி வந்ததும் இதில் உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடி வைக்கவும்.
தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
பின் சர்க்கரை கரைந்து கெட்டியாகி வந்ததும் வறுத்து வைத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பால் கேசரி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |