தங்கம் போல் முகம் ஜொலிக்க உதவும் பால் பவுடர்.., எப்படி பயன்படுத்துவது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற பால் பவுடரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- பால் பவுடர்- 1 ஸ்பூன்
- ஆரஞ்சு சாறு- 3 ஸ்பூன்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் பால் பவுடர், ஆரஞ்சு சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சமமாக தடவி 15 நிமிடம் அப்படியே வைத்து உலர விடவும்.
அதன் பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 2 ஸ்பூன்
- பால் பவுடர்- ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- ½ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் தயிர், பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
இதை முகத்தில் 20 நிமிடங்கள் விட்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர சருமம் இயற்கையாகவே வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |