தித்திக்கும் சுவையில் கேரளா பால் புட்டு.., எப்படி செய்வது?
பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது.
அதன்படி, இந்த சுவையான பால் புட்டை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கேரளா பால் புட்டு எப்படி செய்வதில் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புட்டு மாவு- 2 கப்
- தேங்காய் பால்- 1½ கப்
- கேரட்- 1
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
- சர்க்கரை- ½ கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் புட்டு மாவு சேர்த்து அதில் தேங்காய் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து அரை மணி நேரம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.
பின் இவற்றை கைகளால் நன்கு உதிரி உதிரியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் நெய் ஊற்றி சூடானதும் அதில் துருவிய கேரட் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து கலந்த மாவில் வதக்கிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை புட்டு குழலில் சேர்த்து அதன் மேல் தேங்காய் சேர்த்து வேகவைத்து சர்க்கரை சேர்த்தால் சுவையான பால் புட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |