பாலுடன் சர்க்கரை கலந்து பருகக்கூடாது ஏன்? மருத்துவரின் விளக்கம்

Milk Kids
By Fathima Jun 24, 2023 09:42 AM GMT
Report

பாலுடன் ஏதோ ஒரு வகையான இனிப்பு கலந்து பருகுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மருத்துவர் பரூக் அப்துல்லா.

அவரது பதிவு,

குழந்தைகள் முதல் முதியவர் வரை தினமும் நாம் அன்றாடம் எடுக்கும் உணவின் மூலம் கால்சியம் சத்து கிடைப்பது என்பது கட்டாயத்தேவையாகும்

குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சியிலும் அதன் மூலம் உடல் வளர்ச்சியிலும் பெரியவர்களுக்கு உறுதியான எலும்பை கட்டமைப்பதிலும் அதன் மூலம் ஸ்திரமான உடல் வலிமையையும் நிலைநாட்டுவதில் கால்சியம் சத்தின் பங்கு இன்றியமையாதது.

குழந்தைகளுக்கு 700 மில்லிகிராம் கால்சியமும் முதியோர்களுக்கு தினமும் 1000-1200 மில்லிகிராம் கால்சியமும் கட்டாயத்தேவையாக இருக்கின்றது.

பாலுடன் சர்க்கரை கலந்து பருகக்கூடாது ஏன்? மருத்துவரின் விளக்கம் | Milk With Sugar Calcium Deficiency Tamil

இந்த கால்சியம் சத்தை வழங்குவதில் எளிமையான & முக்கியமான பங்காற்றுவது நாம் அன்றாடம் பருகும் "பால்" என்றே கூறலாம்.  

ஆனால் தினமும் மூன்று கப் பால் பருகுவோருக்கு கூட கால்சியம் பற்றாக்குறை இருப்பதையும் எலும்புகள் நொடிந்து போவதையும் வலிமை இன்றி இருப்பதையும் காண முடிகின்றது.

இதற்கான முக்கியமான காரணமாக நான் பார்ப்பது நாம் அன்றாடம் பருகும் பாலில் சீனி/ நாட்டு சர்க்கரை / வெல்லம்/ கருப்பட்டி/ பனங்கற்கண்டு போன்ற ஏதோ ஒரு இனிப்பு தரும் விசயத்தைக் கலந்து பருகுகிறோம்.

ஆனால் பாலுடன் சர்க்கரை சேர்ந்து பருகப்படும் போது நமது குடலின் கால்சியம் கிரிகித்துக்கொள்ளும் தன்மையை மட்டுப்படுத்தி விடுகின்றது. இதை MALABSORPTION என்போம்.

பாலுடன் சர்க்கரை கலந்து பருகக்கூடாது ஏன்? மருத்துவரின் விளக்கம் | Milk With Sugar Calcium Deficiency Tamil

ஒருவர் குறிப்பிட்ட சத்து தரும் பொருளை உணவாக உட்கொள்ளாத நிலையை Malnutrition என்போம்.

ஆனால் அவர் சத்துள்ள உணவுகளை உட்கொண்டும் அந்த சத்துகள் அவரது உடலுக்குள் செல்லாமல் இருப்பதை Malabsorption என்கிறோம்.

நம்மில் பலர் பா கால்சியம் Malabsorption நிலையில் இருப்பதற்கு நாம் பாலுடன் இனிப்பு சேர்த்து பருகும் பழக்கம் முக்கியமான காரணமாக இருக்கலாம்.

பாலுடன் சர்க்கரை கலந்து பருகக்கூடாது. ஏன்?

❌ கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை நமது சிறுநீரகங்கள் சேர்த்து வைத்துக்கொள்ளாமல் துரிதமாகவும் அதிகமாகவும் வெளியேற்றி விடுகின்றன.

❌ நமது உடலின் எலும்புகளில் கால்சியம் சேர வேண்டும் என்றால் ரத்தத்தில் விட்டமின் டி அளவுகள் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் நாம் உண்ணும் சர்க்கரை விட்டமின் டியை மட்டுப்படுத்தி விடுகின்றது  

❌ நமது உடலில் எலும்புகளை வலிமைப்படுத்தும் செல்கள் osteoblasts எலும்புகளை உருக்கும் செல்கள் osteoclasts நாம் உண்ணும் சர்க்கரை, எலும்புகளை வலிமைப்படுத்தும் ஆஸ்டியோ ப்ளாஸ்ட்களை குறைத்து எலும்புகளை உருக்கும் ஆஸ்ட்டியோ க்ளாஸ்ட்களை அதிகமாக்குகின்றன.

இதனால் கூடிய விரைவில் எலும்பு உருக்கி நோயான ஆஸ்ட்டியோ போரோசிஸ் ஏற்படுகின்றது.

பாலுடன் சர்க்கரை கலந்து பருகக்கூடாது ஏன்? மருத்துவரின் விளக்கம் | Milk With Sugar Calcium Deficiency Tamil

சாதாரணமாக இடறி விழுந்தாலும் இளையோர் முதல் முதியவர் வரை எலும்பு முறிவுகள் தோன்றுகின்றன. 

குழந்தைகள் தங்களது கால்சியம் தேவையை அடைய நாளொரு முட்டை( மஞ்சள் கருவுடன்) கூடவே இரண்டு டம்ளர் கொழுப்புள்ள பால் ( இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட சத்து மாவுகள் கலக்காமல் ) பருகலாம் 

பெரியோர்கள் நாளுக்கு இரண்டு முதல் மூன்று முட்டைகள் ( மஞ்சள் கருவுடன்) கூடவே இரண்டு டம்ளர் கொழுப்புள்ள பால்( இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட சத்து மாவுகள் கலக்காமல்) பருகலாம். 

கால்சியம் குறைபாடுள்ள ரிக்கெட்ஸ் உள்ள குழந்தைகள்,

✅தினமும் இரண்டு டம்ளர் இனிப்பு சேர்க்காத பால் உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பு

✅ மாலை நேர ஸ்நாக்ஸாக இரண்டு முட்டைகள் போட்ட ஆம்லெட் அல்லது அவித்த முட்டை அல்லது பொடி மாஸ்

✅வாரம் ஒரு நாள் ஆட்டு எலும்பு மஜ்ஜை சூப்

✅ வாரம் ஒரு நாள் 100 கிராம் மீன் .

✅ மாமிசம் உண்ணாதோருக்கு தினமும் பால் கூடவே வெண்ணெய் 10 கிராம் கலந்து கொடுக்கலாம். ஆஸ்டியோ பீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெரியோர்கள்

பாலுடன் சர்க்கரை கலந்து பருகக்கூடாது ஏன்? மருத்துவரின் விளக்கம் | Milk With Sugar Calcium Deficiency Tamil

✅தினமும் மூன்று டம்ளர் கொழுப்புள்ள பால் இனிப்பு எதுவும் சேர்க்காமல் பருகி வர வேண்டும். உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு பருக வேண்டும்.

✅டீ/காபி பருகுவதை தவிர்க்க வேண்டும்

✅தினமும் மூன்று முட்டைகள் ஒரு வேளை உணவாக நீங்கள் விரும்பும் விதத்தில் சமைத்து உண்ணலாம்.

✅மாமிசம் உண்ணாதோர் பாலில் பத்து கிராம் வெண்ணெய் கலந்து பருகலாம். 

❌ கீரை , பீன்ஸ் போன்ற காய்கறி உணவுகளில் கால்சியம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அவற்றில் அதிகமாக உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியம் கிரகித்தலை குறைத்து விடுகின்றன. 

❌ கால்சியம் கலந்து சத்து மாத்திரைகளை மருத்துவர் அறிவுரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவைக்கு மீறி அதிக நாட்கள் பயன்படுத்துவது தவறு. 

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US