படிப்பை பாதியில் நிறுத்தி ரூ.20,000 கோடி சாம்ராஜ்ஜியத்திற்கு அதிபதியான ஈரோட்டுக்காரர்.., யார் இந்த தமிழர்?
தமிழக மாவட்டம் ஒன்றை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மில்கி மிஸ்ட் நிறுவனம் பங்குச்சந்தையில் காலடி வைக்கவுள்ளது.
பங்குச்சந்தையில்
தமிழக மாவட்டமான ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு மில்கி மிஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது பங்குச்சந்தையில் காலடி வைக்கவுள்ளது.
இதற்கான முதலீட்டு வங்கிகளை நியமிக்கும் பணியை நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜேஎம் ஃபைனான்சியல் மற்றும் ஐ.ஐ.எஃப். கேபிடல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐபிஓ-வை பங்குச்சந்தைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் ரூ.2,000 கோடி அளவில் ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் 2023-ம் ஆண்டில் இருந்த மதிப்பீட்டை விட மூன்று மடங்கு அதிகம் மதிப்பீட்டை தற்போது பெற்றுள்ளது.
மில்கி மிஸ்ட் நிறுவனம்
தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ,1985 ஆம் ஆண்டு பால் வர்த்தக நிறுவனமாகத் தொடங்கியது.
தனது தந்தையின் பால் தொழிலுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு டி சதீஷ் குமார் நிறுவனத்தை துவங்கினார்.
இந்நிறுவனம் 1994 -ம் ஆண்டில் பன்னீரை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இறுதியில் தயிர், வெண்ணெய், சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.
மில்கி மிஸ்ட் நிறுவனமானது தற்போது சதீஷ் குமார், அவரது மனைவி அனிதா சதீஷ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.ரத்னம் ஆகியோரால் நடத்தப்படுகிறது. இவர் முன்பு அமுல் டெய்ரியில் எம்.டி.யாக இருந்தார்.
மக்களின் மத்தியில் நம்பிக்கையை பெற்ற இந்நிறுவனத்தின் வர்த்தகத்தைக் கைப்பற்ற மாற்றி யோசித்து உருவாக்கிய இன்று ரூ,20000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்நிறுவனத்தின் விற்பனை இந்த ஆண்டு மட்டும் ரூ.2,500 கோடி அளவுக்கு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட உள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.1,950 கோடி வருவாயையும் ரூ.50 கோடி லாபத்தையும் ஈட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |