மில்லர் அதிரடி சதம்; அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ODI தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
miller ton helps south africa won odi series vs australia: டேவிட் மில்லர் அதிரடி சதத்தால், 2வது ODI போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ODI தொடரை கைப்பற்றியுள்ளது.
ODI தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி, 3 ஒருநாள்;மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, டெம்பா பவுமா மற்றும் டேவிட் மில்லரின் அதிரடி சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 365 ஓட்டங்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பவுமா 103 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 142 ஓட்டங்களும் குவித்தனர்.
அவுஸ்திரேலியா தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

366 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் 333 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

அவுஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 84 ஓட்டங்கள் குவித்தனர்.
இதன் மூலம், 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
டேவிட் மில்லர் சாதனை
142 ஓட்டங்கள் குவித்து சதமடித்த டேவிட் மில்லருக்கு இது 8வது ODI சதம் ஆகும்.

இதன் மூலம், 5 அல்லது அதற்கும் கீழான வரிசையில் துடுப்பாட்டம் ஆட தொடங்கி 8வது ஒருநாள் சதத்தை அடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வரிசையில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் சாதனையை மில்லர் சமன் செய்துள்ளார்.
எம்.எஸ்..தோனி மற்றும் யுவராஜ் சிங் தலா 7 சதங்களுடன் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.