உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான தினை அரிசி பொங்கல்.., எப்படி செய்வது?
Millet pongal in tamil- காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றால் பொங்கல்.
திணை அரிசி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஒரு சிறந்த பாரம்பரிய சிறுதானியமாகும்.
தினை அரிசியில் உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான தினை அரிசி பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- தினை அரிசி- ½ கப்
- பாசி பருப்பு- ½ கப்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 2 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 1
- இஞ்சி- 1 துண்டு
- பெருங்காயம்- சிறிதளவு
- மிளகு- 1 ஸ்பூன்
- முந்திரி- 10
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தினை அரிசி மற்றும் பாசி பருப்பு சேர்த்து 3 முறை கழு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் ஒரு குக்கரில் ஊறவைத்த தினை அரிசி, பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு தாளிப்பு கடாயில், நெய் விட்டு அதில் சீரகம், பச்சைமிளகாய், துருவிய இஞ்சி, பெருங்காயம், மிளகு, முந்திரி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இறுதியாக இந்த தாளிப்பை பொங்கலில் சேர்த்து கிளறினால் போதும் சத்தான தினை அரிசி பொங்கல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |