முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினை பொங்கல்; செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் எப்போதும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக பலர் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வார்கள். அந்தவகையில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தினை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தினை - 1/2 கப்
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர் நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
- இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
- பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
- முழு மிளகு - 1 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு
- கறிவேப்பில்லை
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தினை மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பிரஷர் குக்கரில் ஊற வைத்த தினை மற்றும் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு குக்கரை மூடி மிதமான சூட்டில் 3 விசில் வரை வேக வைக்கவும்.
3. தேங்காய்ச் சட்னி செய்ய, ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
4. இதன்மேல் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். தேங்காய் சட்னி தயார்.
5. ஒரு கடாயில் நெய் ஊற்றி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரிப்பருப்பு, முழு மிளகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்து, வேகவைத்த தினை பருப்பு கலவையில் சேர்த்து கிளறவும்.
6. பொங்கல் கெட்டியாக இருந்தால் சிறிது சூடான தண்ணீர் அல்லது சூடான பால் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான தினை பொங்கல் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |