லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியரின் பரிதாப நிலை
லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றார் ஒரு பிரித்தானியர். அடுத்து அவர் செய்த ஒரே விடயம், பார்ட்டி மட்டுமே!
அதுவும் ஒன்று இரண்டு நாட்கள் அல்ல, மூன்று மாதங்கள் தொடர்ந்து பார்ட்டிகளில் கலந்துகொண்டார் அவர்.
ஒரு மில்லியன் பவுண்டுகள்
இங்கிலாந்திலுள்ள Norfolkஐச் சேர்ந்த ஆடம் லோபஸுக்கு (Adam Lopez, 39) ஜூலை மாதம் லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தது.
ஒரு மில்லியன் பவுண்டுகள் என்பது இலங்கை மதிப்பில் 40,72,85,000.00 ரூபாய் ஆகும்.
கையில் பணம் வந்ததும், வேலையை விட்டுவிட்டு, பார்ட்டிகளுக்குச் செல்லத் துவங்கினார் ஆடம்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் பார்ட்டிகளில் பங்கேற்ற ஆடமுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இரத்தக்கட்டி ஒன்று உருவாகி, அது அவரது நுரையீரல் வரை பரவ, சைரன் ஒலி முழங்க, ஆம்புலன்ஸ் ஒன்றில் படுக்கவைக்கப்பட்டிருக்கும்போதுதான் பயம் வந்திருக்கிறது அவருக்கு.
மில்லியன் என்ன, பில்லியன்கள், ட்ரில்லியன்கள் இருந்தாலும், நீங்கள் ஆம்புலன்சில் படுக்கவைக்கப்பட்டிருந்தால் பணமெல்லாம் ஒரு விடயமே அல்ல என்கிறார் ஆடம்.
வாழ்க்கை அப்படியே ஜாலியாகப் போகாது, ஒரு நாள் அது முடிவுக்கு வரும் என்று நினைத்தேன். ஆனால், இப்படி ஆகும் என நான் நினைக்கவில்லை என்கிறார் ஆடம்.
ஆடம் முழுமையாக சகஜ நிலையை அடைய, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |