பிரித்தானியாவில் கோடீஸ்வரர் ஒருவர்... மாளிகையில் குத்தி கொலை! ஆபத்தான நிலையில் மனைவி
பிரித்தானியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான சர் ரிச்சர்ட் லெக்சிங்டன் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது இரண்டாவது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரித்தானியாவில் கோடீஸ்வர்களில் ஒருவரான Sir Richard Sutton, அவர் தங்கியிருந்த மாளிகையில் அடையாளம் தெரியாத மர்மநபரால் நேற்றிரவு கத்தி குத்தால் தாக்கப்பட்டார்.
540 மில்லியன் டொலர் சொத்து மதிப்புக் கொண்ட Sir Richard Sutton(83) மற்றும் அவரது இரண்டாவது மனைவி Anne Schreiber(65)-ம் தாக்கப்பட்டார்.
இதில் Sir Richard Sutton படுகாயங்களுடன் சம்பவ இடத்திலே இறந்துவிட்டதாகவும், Anne Schreiber உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
தென் மேற்கு இங்கிலாந்தின் Dorset பகுதியிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்கு பிறகு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 160 கி.மீற்றர் தூரதம், அதாவது மேற்கு லண்டனில், 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், அந்த நபர் இந்த தம்பதிக்கு உறவினர் என்பது தெரியவந்தால், அவரை விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த Sir Richard Sutton ஒரு நல்ல மனிதர் என்று மக்களால் அழைக்கப்படுபவர், இவர் இங்கிலாந்தில், இரண்டு பார்க் லேன் ஹோட்டல்கள் உட்பட ஒரு பெரிய சொத்துக்களை வைத்திருந்தார்.
இவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் கூறுகையில், என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
ஆனால், இது மிட்சோமர் கொலைகளை விட மோசமானது. இது ஒரு முழுமையான சோகம் என்று கூறியுள்ளார்.


