முதல் கணவர் மூலம் 1 குழந்தை! டாக்சி ஓட்டுனரை 2ஆம் திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வர லண்டன் பெண்.. ஒரு சுவாரசிய பின்னணி
லண்டனை சேர்ந்த நடிகையும் கோடீஸ்வரியுமான patsy palmer கார் ஓட்டுனரை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என தெரியவந்துள்ளது.
நடிகையும், கோடீஸ்வரியுமான Patsy Palmer கடந்த 1998ஆம் ஆண்டு Nick Love என்பவரை மணந்த நிலையில் 2000ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் அதே ஆண்டில் கால் டாக்ஸி ஓட்டுனரான Richard Merkell என்பவருடன் Patsy காதலில் விழுந்ததோடு அதே ஆண்டு அவரை ரகசியமாக மணந்தார். பிரபலமான பெண்ணான Patsy டாக்சி ஓட்டுனரை மணந்தது அப்போது பேசும் பொருளாக இருந்தது.
இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் Richard-ஐ பிரம்மாண்ட நிகழ்வில் Patsy திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் கணவர் மூலம் Patsyக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2014ல் Patsy லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்
தற்போது அங்கு தான் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் அவர் வசித்து வருகிறார்.
சமீப காலமாக குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவர் அதிகம் பகிரும் நிலையில் அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதை பற்றிய செய்தியும் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
