மாதம் ரூ.3000 முதலீட்டில் கோடீஸ்வரராவது எப்படி? முழுமையான விவரம்
ஒவ்வொரு மாதமும் முறையான முதலீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட பணத்தை டெபாசிட் செய்தால் கோடீஸ்வரர் ஆக முடியும். பொதுவாகவே எல்லோருக்கும் நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் தான் எண்ணமாக இருக்கும்.
தற்போதைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட எப்படி முதலீடு செய்கிறோம் என்பது தான் முக்கியமானதாக உள்ளது.
நீண்ட கால முதலீட்டு உத்தியைக் கடைப்பிடித்து, SIP மூலம் mutual fund-ல் முதலீடு செய்ய வேண்டும். SIP என்பது ஒரு mutual fund-ல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை deposit செய்வதன் மூலம் பெரிய தொகையை உருவாக்க முடியும்.
அப்படி நாம் mutual fund-ல் முதலீடு செய்த பணத்தின் மீது கூட்டு விகிதத்தில் வட்டி பெறுகின்றன. இது நம்முடைய முதலீட்டுத் தொகையை மிக வேகமாக அதிகரிக்கும்.
ரூ.3000 முதலீடு
இப்போது நாம் மாதம் தோறும் வெறும் ரூ.3000 முதலீடு செய்து எப்படி கோடீஸ்வரர் ஆகலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
* 30 ஆண்டுகளுக்கு Mutual Fund SIP-ல் மாதம் ரூ.3000 டெபாசிட் செய்தால் ரூ.1,05,89,741 நிதியை உருவாக்க முடியும்.
* Mutual Fund SIP -க்கள் ஆண்டுக்கு 12% வட்டியைப் பெறும். அந்தவகையில், மாதம் ரூ.3000 டெபாசிட் செய்தால் 30 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயை சேமிக்க முடியும்.
இந்த செய்தியை நீங்கள் முதலீடு செய்வதற்குரிய ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் முதலீடு செய்வதற்குரிய முடிவை எடுக்கும் போது பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட பிறகு முடிவை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |