2.4 மில்லியன் பிரித்தானியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! இனி இதற்கு தடை விதிக்கப்படவுள்ளது
குறிப்பிட்ட இ-சிகரெட்டுகளை உபயோகிக்க தடை விதிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) முன்மொழிந்துள்ள திட்டத்தினால், மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் Vaping செய்வதற்கான தடையை எதிர்கொள்ளவுள்ளனர்.
E-Cigarette என அழைக்கப்படும் மின்-சுருட்டை பயன்படுத்தி புகைப்பது Vaping எனப்படும்.
பிரித்தானியா முழுவதும் சுமார் 2.4 மில்லியன் மக்கள் Vaping செய்கின்றனர். சுமார் 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த தொழிலைச் சார்ந்து சுமார் 2000 நிறுவனங்கள் இயங்குகின்றன. அவர்கள் அனைவருக்கும் தற்போது இந்த செய்தி ஒரு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மேலும், இது ஒரு பொறுப்பற்ற விநோதமான யோசனை என வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்.
Vaping-ஐ தடை செய்வதன்முலம் புகையிலை மற்றும் சிகரெட் வர்த்தகம் பாதுகாக்கப்படும். அதனால், மீண்டும் மக்களிடையே சிகரெட் பழக்கம் அதிகமாகி புற்றுநோய், இதயம் மற்றும் நுரையீரல் நோய்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.
WHO குறிப்பாக Open-Vaping-ஐ குறிவைத்து இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது. கூடுதல் சாதன அம்சங்கள் மற்றும் திரவ பொருட்கள் கட்டுப்படுத்தகூடிய E-Cigarette-ஐ பயன்படுத்துவது Open-Vaping எனப்படும். இதனால், பெரும் பாதிப்பு ஏற்படலாம் என WHO நினைப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிரித்தானியாவில் E-Cigarette-ஐ பயன்படுத்தும் 3.2 மில்லியன் மக்களில் 77 சதவீதம் பேர் (2.4 மில்லியன்) இந்த Open-Vaping சாதனத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த பரிந்துரை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் Glassglow-ல் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்படஉள்ளது.
பிரித்தானியாவின் பொது சுகாதார அதிகாரிகள், Vaping புகைபிடிப்பதை விட 97 சதவீதம் பாதுகாப்பானது என்றும், புகையிலையை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களை மின்-சிகரெட்டுகளை முயற்சிக்க ஊக்குவிப்பதாகவும் கூறுகின்றனர்.


