ராஜகுடும்பம் மூலம் பிரித்தானியாவுக்கு கிடைக்கும் பல மில்லியன் பவுண்டுகள்... எப்படி தெரியுமா?
சுற்றுலா மூலம் ராஜகுடும்பம் பிரித்தானியாவுக்கு பல மில்லியன் பவுண்டுகள் ஈட்டிக்கொடுக்கிறது.
2019 - 20 காலகட்டத்தில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் 49.9 மில்லியன் பவுண்டுகள்.
ராஜகுடும்பம், சுற்றுலா மூலம் பிரித்தானியாவுக்கு பல மில்லியன் பவுண்டுகள் ஈட்டிக்கொடுக்கிறதாம்.
2019 - 20 காலகட்டத்தில் மட்டும், ராயல் எஸ்டேட்டுகளைப் பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகளிடம் டிக்கெட் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை 49.9 மில்லியன் பவுண்டுகள் என்கிறது Independent பத்திரிகை.
சுற்றுலா மூலம் ராஜகுடும்பம் எவ்வளவு பணம் கொண்டுவருகிறது?
2021 ஏப்ரலிலிருந்து, 2022 மார்ச் வரை விண்ட்சர் மாளிகையையும், ஃப்ராக்மோர் மாளிகையையும் காண வந்த மக்களுடைய எண்ணிக்கை தோராயமாக 426,000.
பக்கிங்காம் அரண்மனை, கிளாரன்ஸ் இல்லம் முதலான இடங்களைக் காணவும் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.
அத்துடன், பரிசுப்பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் ஆண்டொன்றிற்கு 19,983,646 பவுண்டுகள் வருவாய் கிடைக்கிறதாம்.
வரலாற்றிலேயே அதிக அளவாக 3,285,000 பேர் ராஜகுடும்பம் தொடர்பான கட்டிடங்களை பார்வையிட்டதில், பிரித்தானியாவுக்கு 49,859,000 பவுண்டுகள் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது Independent பத்திரிகை.