நெருங்கும் மில்டன் புயல்... நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Florida Weather
By Arbin Oct 08, 2024 07:48 PM GMT
Report

புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில், வெளியேற மறுக்கும் மக்கள் கட்டாயம் மரணத்தை சந்திப்பீர்கள் என தம்பா மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரணத்தை எதிர்கொள்வார்கள்

புளோரிடா மாகாணத்தின் மேற்குக் கரையோர மக்கள் செவ்வாயன்று மில்டன் சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

நெருங்கும் மில்டன் புயல்... நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Milton Nears Floridians Warned Going To Die

சூறாவளியில் சிக்காமல் இருக்க ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால், பிரதான சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இந்த நிலையில், வெளியேறும் உத்தரவுக்கு பதிலளிக்க மறுக்கும் மக்கள், கண்டிப்பாக மரணத்தை எதிர்கொள்வார்கள் என தம்பா மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மில்டன் புயலானது மெக்சிகன் நகரமான மெரிடாவைக் கடந்து புளோரிடாவை அணுகி வடக்கே அமெரிக்காவை நோக்கி நகர்வதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 250 கி.மீற்றர் என இருக்கும் என்றும் புயலின் தாக்கம் 15 அடி வரையில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், மேற்கு-மத்திய புளோரிடாவில் பதிவாகியுள்ள மிக அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாக மில்டன் இருக்கும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் மில்டன் புயல்... நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Milton Nears Floridians Warned Going To Die

அத்துடன், இது மிகவும் கடுமையான அச்சுறுத்தல் மற்றும் புளோரிடாவில் வசிப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு செவிசாய்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அழிவை ஏற்படுத்தக்கூடும்

இதனிடையே, மில்டன் சூறாவளியானது கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் வீசும் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் மில்டன் புயல்... நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Milton Nears Floridians Warned Going To Die

மேலும் பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மில்டன் சூறாவளியானது புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரையை உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலைக்குள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹெலேன் சூறாவளியின் பேரழிவிலிருந்து ஏற்கனவே தத்தளிக்கும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

புளோரிடாவின் மேற்குக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் சூறாவளி எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வெளியேற்றுமாறு கூறப்பட்டுள்ளது.

நெருங்கும் மில்டன் புயல்... நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Milton Nears Floridians Warned Going To Die

3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தம்பா விரிகுடா பகுதியில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என்றே கூறப்படுகிறது. 1921 ஆம் ஆண்டிலிருந்து தம்பா பகுதியானது ஒரு பெரிய சூறாவளியால் நேரடியாகத் தாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US