பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி
PSL 2026 12வது போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராவல்பிண்டிஸை வீழ்த்தியது.
கம்ரான் குலாம் அரைசதம்
இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் ராவல்பிண்டிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய ராவல்பிண்டிஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப, கம்ரான் குலாம் (Kamran Ghulam) 39 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார்.
அப்துல்லா ஃபாஸல் 16 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 23 ஓட்டங்கள் எடுத்தார். தியான் ஃப்போரெஸ்ட்டர் ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 44 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினார்.
இதன்மூலம் ராவல்பிண்டிஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்தது. ரிச்சர்ட் க்ளீஸன், ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் சல்மான் இர்ஷாத் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மின்ஹாஸ் மிரட்டல் ஆட்டம்
பின்னர் களமிறங்கிய இஸ்லாமாபாத் அணியில் கான்வே 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மொஹம்மது ஃபைக் 19 ஓட்டங்களில் வெளியேற, சமீர் மின்ஹாஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

அவரது அதிரடியில் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அரைசதம் அடித்த சமீர் மின்ஹாஸ் (Sameer Minhas) 36 பந்துகளில் 70 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார்.
எனினும், ஹைதர் அலி 26 (16) ஓட்டங்களும், மார்க் சாப்மேன் 24 (7) ஓட்டங்களும் விளாச, இஸ்லாமாபாத் யுனைடெட் 14.2 ஓவர்களில் 157 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |