பிரான்சில் சுரங்க ரயில் மீது பேருந்து மோதி விபத்து: 19 பேர் காயம்
A minibus collided with a freight train near the Channel Tunnel entrance in France: பிரான்சில், சுரங்க ரயில் மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடக்கு பிரான்சில், நின்றுகொண்டிருந்த சுரங்க ரயில் ஒன்றின் மீது, பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுரங்க ரயில் மீது பேருந்து மோதி விபத்து
நேற்று, இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் ஒரு ரயில் நின்றுகொண்டிருந்திருக்கிறது.
அப்போது, வேகமாக வந்த பேருந்து ஒன்று, அந்த ரயில் மீது மோதியுள்ளது.

அந்த விபத்தில், பேருந்தின் சாரதியும், பேருந்தில் பயணித்த 18 பயணிகளும் காயமடைந்துள்ளார்கள்.
சாரதியும் இரண்டு பயணிகளும் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். என்றாலும், அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த பேருந்தில் பயணித்த அனைவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள். அவர்கள் வேலைக்குச் செல்வதற்காக ரயில் ஏற வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதற்கிடையில், எப்படி அந்த விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்நிலையில், இப்படி, நின்றுகொண்டிருந்த ஒரு சுரங்க ரயில் மீது ஒரு பேருந்து மோதி விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறை என்கிறார்கள் அதிகாரிகள்.