கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு
2023ஆம் ஆண்டளவில் புதிய கல்வித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கல்வி அமைச்சு தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படுத்தவதற்கு ஏற்ற வகையில் பாடவிதானங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
டிசம்பர் மாதம் நடைபெறும் காபொத சாதாரண தரப் பரீட்சையை நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாத்தில் நடத்தப்படும். க.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேற்றினை நவம்பர், டிசம்பர் காலப்பகுதிக்குள் வெளியிடப்படும்.
அந்த பெறுபேறுகளின் பிரகாரம் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஜனவரி மாத்திற்குள் ஆரம்பிப்பதற்கான சூழல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.