அமலாக்கத்துறையால் மீண்டும் ஒரு அமைச்சர் கைது: அதிகாலையில் பரபரப்பு
இந்திய மாநிலம், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை ஊழல் விவகாரத்தில் இன்று அதிகாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
முறைகேடு
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு, வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மல்லிக் இருந்து வருகிறார்.
இவர், உணவுத்துறை அமைச்சராக இருந்த போது, ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இவரின் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ED கைது
இந்நிலையில், நேற்று காலை மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு சொந்தமான 2 வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இதற்கு முன்னதாக, ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு நெருக்கமான நபரை அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த விவகாரத்தில் இன்று அதிகாலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. அப்போது, “மிகப் பெரிய சதித் திட்டத்துக்கு பலிகடாவாக்க பட்டுள்ளேன்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |