தெருவில் காகிதம் சேகரித்தவர் வணக்கம் வைத்ததால் நொடியில் மாறிய வாழ்க்கை.., அமைச்சரின் மனிதநேயம்
தெருவில் காகிதம் சேகரித்து பிழைத்து கொண்டவருக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் வேலை கொடுத்துள்ளார்.
தெருவில் காகிதம் சேகரித்தவர்
நேற்று காலை சென்னை கிண்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, தெருவில் காகிதம் சேகரித்து கொண்டிருந்த திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் அமைச்சரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். உடனே, அமைச்சர் அவரை அழைத்து விசாரித்தார்.
அவரும் தன்னுடைய நிலைமை குறித்து அமைச்சரிடம் விளக்கினார். இதையடுத்து, அமைச்சர் அவரை தன்னுடைய வாகனத்தில் அழைத்துச் சென்று தனது வீட்டில் குளிக்க வைத்து உணவு, உடை கொடுத்தார்.
பின்னர், அவரைசென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சொன்னார்.
அதன்பின்னர், மருத்துவ மனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளர் பணியை அவருக்கு வழங்கினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனிதநேயமிக்க இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |