மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்.., இர்ஃபான் வீடியோ குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்
தனது மனைவியின் பிரசவத்தில் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை, யூடியூபர் இர்ஃபான் பகிர்ந்த விவகாரத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
மா.சுப்பிரமணியன் காட்டம்
பிரபல யூடியூபர் இர்ஃபான், சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் ஸ்கேன் எடுத்து அறிவித்தார்.
பாலினத்தை அறிவிப்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய புகார்கள் வந்தது. ஆனால், அவர் மன்னிப்பு கூறியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து, சர்ச்சையான அந்த வீடியாவை யூடியூப் தளத்தில் இருந்து இர்ஃபான் நீக்கிவிட்டார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் விரைவில் விசாரணை நடந்த சுகாதாரத் துறை முடிவு செய்து உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்.
இந்த விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை இர்பான் மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். தனியார் மருத்துவமனையின் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |