போதைப்பொருள் விவகாரம் - சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக

Udhayanidhi Stalin DMK TN Assembly
By Karthikraja Aug 17, 2026 06:24 AM GMT
Report

dmk walkout assembly : போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.  

இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர். 

போதைப்பொருள் விவகாரம் - சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக | Minister Not Answer Dmk Walkout In Tn Assembly

இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே அவையில் எழுப்பும் பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இது ஒரு கோஷ்டி பூசலால் நடந்த கொலை என தெரிவித்துள்ளார். 10 பேர் சண்டை போட்டு பத்து பேர் மோதினால் அது கோஷ்டி பூசல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர். அதனால் இது படுகொலை.

மாணவர் அமுதன் விவகாரத்தில், கோவை செட்டிபாளையம் போலீசார் வழக்கு விசாரணைக்காக அமுதனை வர சொல்லியுள்ளனர். போதை கும்பல் குறித்து அமுதனிடம் தகவல் வாங்கிய காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடித்து நியாயமாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

ஆனால், போதைப் பொருள் குறித்து அமுதனிடம் தகவல் பெற்ற காவல் துறையினர் குற்றவாளிகளிடமே அது குறித்தான தகவலை பகிர்ந்து உள்ளனர். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

போதைப் பொருள் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் அமுதன் தகவல் கொடுத்ததால் தான் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வு செய்த பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை தான் முன் வைக்கிறார்கள் இது தனிப்பட்ட கோஷ்டி பூசலாக கடந்து போய்விட முடியாது.

அரசின் அலட்சியத்தாலும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால் தான் இந்த கொலை நடந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒருவருக்கும் விடப்படும் எச்சரிக்கை தான் இந்த கோவை சம்பவம்.

சென்னையிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் திருவொற்றியூரைச் சேர்ந்த தனுஷ் குமார் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக தட்டிக் கேட்டுள்ளார். அவரை 40 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்தனர்" என பேசினார். 

“தளபதி விஜய்” சாலை: கிராம சபையில் பரந்தூர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றம்

“தளபதி விஜய்” சாலை: கிராம சபையில் பரந்தூர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றம்

ஜாபர் சாதிக்குடன் தொடர்பு

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "மாணவர்கள் குழுக்களுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக அமுதன் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, பழிவாங்கலே காரணம். 

போதைப்பொருள் விவகாரம் - சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக | Minister Not Answer Dmk Walkout In Tn Assembly

போதைப்பொருள் குறித்து புகாரளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்ததால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. இதுவரை அமுதன் கொலையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், திமுக ஆட்சியில் டெல்லியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் முதல்வர் குடும்பம் மற்றும் அமைச்சர்களுக்கு இருந்த தொடர்பு அனைவரும் அறிந்தது" என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "கடந்த ஆட்சியில் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட நபரை, எங்கள் தலைவர் உடனடியாக கைது செய்ததோடு, கட்சியில் இருந்தும் நீக்கிவிட்டார்.

ஆனால் தவெக ஆட்சியில் ஒரு அமைச்சரே IPL விளையாட்டின்போது பவுடர் நுணுக்கிவிட்டு, மாத்திரையை நுணுக்கியதாக கதை விட்டார். அவரிடம் காவல்துறை ஏதேனும் விசாரணை நடத்தியதா? தவெக ஏதும் நடவடிக்கை எடுத்துருக்கிறதா" என கூறினார்.

அமைச்சர் சரத்குமார் விளக்கம்

இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், "அந்த வீடியோ தவறான புரிதலோடு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதை ஏற்கனவே நான் தெளிவாக விளக்கிவிட்டேன். அதில் அவர்களுக்கு முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான். 

போதைப்பொருள் விவகாரம் - சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக | Minister Not Answer Dmk Walkout In Tn Assembly

அப்போது ஸ்டேடியத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்" என பதிலளித்தார்.

திமுக வெளிநடப்பு  

இதனையடுத்து தங்கள் கேள்விக்கு அரசு தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை என தெரிவித்த திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது.

வெளிநடப்பு செய்த பின்னர் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், "கோவையில் மாணவர் அமுதன், திருவொற்றியூரில் மாணவர் தனுஷ் ஆகியோரை போதைப் பொருள் கும்பல் அடித்துப் படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கேள்வி எழுப்பினோம். 

போதைப்பொருள் விவகாரம் - சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக | Minister Not Answer Dmk Walkout In Tn Assembly

ஆனால், அதற்கான தெளிவான விளக்கத்தை அளிக்காமல், எதிர்க்கட்சிகளின் மேல் பழி போடும் வழக்கத்தையே தவெக அரசு செய்து வருகிறது.

கடந்த 3 மாதங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தவெக அரசில் எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரியவில்லை. அந்தத்துறை குறித்த கேள்விக்கு, துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை.

சட்டம், ஒழுங்கு குறித்த கேள்விக்கு அந்தத் துறை அமைச்சர் அவையிலே இல்லை. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிப்பதில்லை. இதைக் கண்டித்து தான் வெளிநடப்பு செய்தோம்" என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US