நடிகர் வடிவேலுவை சந்தித்த தமிழக அமைச்சர்.., வைரலாகும் புகைப்படம்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், விமான நிலையத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |