நேபாளத்தில் சிக்கியுள்ள 106 தமிழர்கள் - அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் விளக்கம்
106 tamil peoples in nepal : நேபாளத்தில் 106 தமிழர்கள் சிக்கியுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
நேபாளத்தில் சிக்கியுள்ள 106 தமிழர்கள்
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

1,500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 தமிழர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

இதில் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.
இதில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை சாலை வழியாக காட்மாண்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை மீட்பது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |