பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக... 300 புலம்பெயர்ந்தோரை ஒரே நாளில் நாடுகடத்த அமைச்சர்கள் திட்டம்
பிரித்தானிய வரலாற்றில் இதுவரை நடந்திராத வகையில், ஒரே நாளில் 300 சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் ஒன்றை பிரித்தானிய அமைச்சர்கள் தீட்டி வருகிறார்கள்.
அவர்களை நாடுகடத்துவதற்காக ஈராக்கிய குர்திஸ்தான், அல்பேனியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களை முன்பதிவு செய்துள்ளது பிரித்தானிய உள்துறை அமைச்சகம்.
நாடுகடத்தப்பட உள்ளவர்கள், பிரித்தானியாவில் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Colnbrook முதலான இடங்களிலுள்ள புலம்பெயர்தல் மையங்களில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
புலம்பெயர்தல் அதிகாரிகள், பிரித்தானியா முழுவதிலுமிருந்து அவர்களை வலைவீசிப் பிடித்து இந்த மையங்களில் அடைத்துள்ளார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும், தாங்கள் நாடுகடத்தப்பட உள்ளது குறித்து தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளது உள்துறை அமைச்சகம்.
கவனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டம்தான், பிரித்தானியாவிலேயே முதன்முறையாக ஒரே நாளில் 300 வெளிநாட்டவர்கள் வரை நாடுகடத்தப்படும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.