கல்வி அமைச்சு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை: அதிபர்கள் தெரிவிக்கும் விடயம்
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்று பாடசாலைகளின் அதிபா்கள் தொிவித்துள்ளனர்.
பாடசாலைகள் கோவிட் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே அந்த மாணவர்களுக்கு உரிய கல்விச்செயற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை கல்வி அமைச்சும் அதன் கீழ் செயல்படும் அதிகாரிகளுமே மேற்கொள்ள வேண்டும்.
எனினும் இதனை கல்வி அமைச்சும் அதன் கீழ் செயற்படும் அதிகாரிகளும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் பராக்கிரம வீரசிங்க (Parakrama Weerasinghe), கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொிவித்துள்ளார்.
இதிலிருந்து மாணவர்களுக்கான கல்வியை தீர்மானிப்பது ஆசிரியர்களும் அதிபர்களும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
எனவே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதனப்பிரச்சனைக்கான கோரிக்கைகள் நியாயமானது என்பது உறுதியாவதாக பராக்கிரம வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.