தேம்ஸ் நதியில் வந்து மாட்டிக்கொண்ட திமிங்கலம்! உயிருடன் மீட்க போராடிவரும் மீட்புப் படையினர்! வெளியான சுவாரசியமான புகைப்படங்கள்
தென்மேற்கு லண்டனில் தேம்ஸ் நதியில் சிக்கித் தவிக்கும் திமிங்கல குட்டியைக் காப்பாற்ற அவசர மீட்பு பணி நடந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை Richmond Lock மற்றும் Weir பகுதியில் மாட்டிக்கொண்ட இந்த சிறிய திமிங்கலத்தை உயிருடன் வைத்திருக்க மீட்புப்படையினர் போராடிவருவகின்றனர். அதனைக் காண நூற்றுக்கணக்கானவர்கள் அப்பகுதியில் கூடினர்.
இந்த குட்டி திமிங்கலம் 3 முதல் 4 மீட்டர் நீளமுள்ள ஒரு Minke திமிங்கலம் என்று நம்பப்படுகிறது, இது இரவு 7 மணியளவில் Richmond Lock படகு உருளைகளில் சிக்கி அடிபட்டது.
அதனையடுத்தது, இரவு 9 மணியளவில் ராயல் நேஷனல் லைஃப் போட் நிறுவனம் (RNLI) சம்பவ இடத்திற்கு வந்தது.
திமிங்கலத்திற்கு உடனடியாக ஆபத்து இல்லை, இங்குள்ள அனைவரும் சேர்ந்து அதை மீட்டுவிடுவார்கள் என்று நம்புவதாக போர்ட் ஆஃப் லண்டன் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் மீட்பு குழு திமிங்கலத்தை உயிருடன் வைத்திருக்க தண்ணீர் ஊற்றி வருகின்றனர். பொதுமக்களை தண்ணீரின் விளிம்பிலிருந்து விலக்கி வைக்க பெருநகர காவல்துறை செயல்பட்டு வருகிறது.
Minke திமிங்கலங்கள் பெரிய திமிங்கலங்களில் மிகச் சிறியவை மற்றும் சுமார் 10 மீட்டர் வரை வளரக்கூடியவை. அவை பொதுவாக வடக்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகின்றன, ஆனால் அவை கோடையில் ஆர்க்டிக்கில் உள்ள பனி விளிம்பிலிருந்து குளிர்காலத்தில் பூமத்திய ரேகைக்கு அருகே சென்று வரக்கூடியவை என கூறப்படுகிறது.