காதலனை விடுதலை செய்யக்கோரி மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்ணால் பரபரப்பு
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது காதலனை விடுதலை செய்யக்கோரி, இளம்பெண்ணொருவர் 100 அடி உயர மொபைல் டவரில் ஏறி அமர்ந்துகொண்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்
வியாழக்கிழமையன்று, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பொக்காரோ நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ராஞ்ச்சி நகரைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடத்திச் சென்றுவிட்டதாக அந்த 17 வயது பெண்ணின் தாய் பொலிசில் புகாரளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் ராஞ்ச்சியில் கண்டுபிடித்த பொலிசார், அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் இப்போது சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், அந்த 22 வயது இளைஞர் தனது காதலன் என்றும், சிறையிலடைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, இன்று காலையில், 100 அடி உயர மொபைல் டவர் ஒன்றில் ஏறி அமர்ந்துகொண்டுள்ளார் அந்த இளம்பெண்.
தன் காதலனை விடுதலை செய்யாவிட்டால் தான் கீழே குதித்துவிடுவதாக அவர் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமான மக்கள் அங்கு குவிய, அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்த இளம்பெண் டவரிலிருந்து இறங்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |