சல சலவென 7 கிலோ எடையை குறைக்கும் கேரளத்து மக்களின் அதிசய பானம் - தயார் செய்வது எப்படி?
பொதுவாகவே அனைத்து பெண்களும் எடையை குறைப்பதற்கு பல விதமான முயற்சிகளை செய்து பார்ப்பது வழக்கம்.
அதிலும் சிலர் கடைகளில் விற்கப்படும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவார்கள். அது ஒரு சில காலங்களில் பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அதற்காகவே பலரும் வீட்டு வைத்தியத்தை முன்னெடுக்கின்றனர். வீட்டு வைத்தியம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கேரள மக்களின் வீட்டு வைத்தியம் தான்.
மஞ்சள், இலவங்கப்பட்டை, இஞ்சி, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்கள் கேரளாவில் எடை இழப்புக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும் திறன் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு மசாலாப் பொருட்கள் உதவும்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்காகவே ரசிகர்களின் மனதில் இன்று வரையில் நிலைத்து நிற்கும் நடிகை சோனா கூறிய கேரளத்து மக்களின் பானம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சல சலவென எடையை குறைக்கும் கேரள பானம்
தேவையான பொருட்கள்
- ஒரு கப் - தண்ணீர்
- அரை ஸ்பூன் - சுக்கு தூள்
- ஒரு ஸ்பூன் - கருஞ்சீரக தூள்
- ஒரு சிட்டிகை - மஞ்சள் தூள்
- அரை எலுமிச்சை பழ சாறு
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் அரை ஸ்பூன் சுக்கு தூள், ஒரு ஸ்பூன் கருஞ்சீரக தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து ரசம் போன்று கொதிக்க வைக்கவும்.
- பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி, வடிக்கட்டி அரை எலுமிச்சை பழ சாறு சேர்த்து இரவு நேரத்தில் உறங்கச் செல்லும் முன்பாகக் குடிக்க வேண்டும்.
- மேலும் இதை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் 7 கிலோ எடையை வேகமாக குறைக்கலாம் எனவும் நடிகை சோனா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |