அவுஸ்திரேலியாவில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்து: அதிர்ஷடவசமாக தப்பிய பெண் விமானி
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ரயில் தடங்களுக்கு அருகே சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதிலிருந்த பெண் விமானி அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பினார்.
அதிர்ஷடவசமாக தப்பிய பெண் விமானி
குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை (QAS) மருத்துவ நோயாளிகளைக் கொண்டுசெல்லும் விமானமான அது இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ச்சர்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு அருகே 3 கிலோமீட்டர் தூரத்தில் அவசரமாகத் தரையிறங்கும் வேளையில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. உயிர் தப்பிய பெண் விமானி இளவரசி அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 30 வயது மதிக்கத்தக்க அவர்ர் பலத்த காயம் அடையாததைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Australian Associated Press
விசாரணை
குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவையின் படி, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது; இருப்பினும், விமானி அவ்வாறு செய்ய என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விமானம் ஏர்மெட் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமானது, இது மெதேவாக் சேவை ஆபரேட்டராகும்.
இந்த விபத்து குறித்து தெளிவிற்காக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். "சம்பவத்தின் சிசிடிவி அல்லது டாஷ்கேம் காட்சிகளுடன் அருகில் உள்ள எவரும் குயின்ஸ்லாந்து காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.