தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள்! இரத்தம் கூட சுத்தமாகும்
கேரட் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக உள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை வழங்கக்கூடிய கேரட்டை தினமும் ஒன்று சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கேரட்டில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. கோடைக்காலங்களில் வெளியே செல்லும்போது அதிகமான வெயில் கண்களையும், தோலையும் பாதிக்காமல் தடுக்க தினமும் கேரட்டை தோலை சீவி சாப்பிடலாம்.
நாள்பட்ட வயிற்று புண் குணமாக கேரட் துருவலுடன் உப்பில்லாத தயிர் சேர்த்து தினமும் காலை சாப்பிடலாம்.
தினமும் காலையில் கேரட்டை நறுக்கி சிறிது உப்பு தூவி சாலட் போல செய்து சாப்பிட்டால் அது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வருவதால் தோல் சுருக்கங்கள் நீங்கி உடல் பொலிவு பெறும்.