இந்தியாவுக்கு எதிராக இவரை போல் தான் விளையாட போகிறேன்! வெளிப்படையாக உத்தியை கூறிய நியூசிலாந்து நட்சத்திரம்
இந்தியாவுக்கு எதிரான தான் கையாளும் எடுக்கவிருக்கும் உத்தியை நியூசிலாந்து நட்சத்திர பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ள இந்தியா-நியூசிலாந்து இரு அணிகளும் நாளை அக்டோபர் 30 மோதவிருக்கின்றன.
இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடியை போல் பந்து வீசப் போவதாக நியூசிலாந்து நட்சத்திர பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ஷாஹீன் அற்புதமாக பந்துவீசினார், ஆனால் இந்திய அணியிலும் திறமையான பேட்டிஸ்மேன்கள் இருக்கின்றனர்.
இந்திய அணியின் ஆரம்ப பேட்டிஸ்மேன்களின் விக்கெட் விரைவாக கைப்பற்ற நாங்கள் குறியாக இருக்கிறோம்.
ஆனால், அதற்கு நாங்கள் நினைக்கும் இடத்தில் பந்தை நேர்த்தியாக சரியாக போட வேண்டும்.
நாளை இரவு நடக்கும் போட்டியில் நான் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடியை போல் பந்து வீசுவேன்.
இந்திய முன்நிறுத்தும் சவால்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் முதலில் பந்து வீசினாலும், பேட்டிங் செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும்.
முதலில் பந்து வீசினால் எப்படி மளமளவென விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவான திட்டத்துடன் இருக்க வேண்டும், ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் முடிந்தவரை பெரிய இலக்கை கொடுக்க வேண்டும்.
எதுவாக இருந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.