வாஸ்து: வீட்டின் இந்த திசையில் கண்ணாடியை வைத்தால் துன்பம் பெருகுமாம்
வாஸ்து படி வீட்டின் தவறான திசைகளில் கண்ணாடிகளை வைக்கும் போது வீட்டில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
கண்ணாடியை நிறுவும் போது வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கிறது என்று கூறப்படுகிறது.
வீட்டில் கண்ணாடிகள் தொடர்பான வாஸ்து விதிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
கண்ணாடியின் வாஸ்து
வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கண்ணாடி வைப்பது எப்போதும் மங்களகரமானது.
வடகிழக்கு திசையில் வைக்கப்படும் கண்ணாடி செல்வத்தை ஈர்க்கும் என்பது ஐதீகம்.
மேலும், வடக்கு அல்லது கிழக்கு திசையில் கண்ணாடி வைப்பது நிதி ஆதாயத்திற்கு நன்மை பயக்கும்.
வீட்டில் அழுக்கு மற்றும் உடைந்த கண்ணாடிகளை வைத்து இருக்க கூடாது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் முன்னேற்றப் பாதையில் தடைகளை சந்திக்க நேரிடும்.
மேற்கு அல்லது தெற்கு சுவர்களில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.
சமையலறையில் கண்ணாடியை நிறுவுவது நல்லதாக கருதப்படுவதில்லை. இதனால் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
படுக்கையறையில் கண்ணாடிகள் நிறுவப்படக்கூடாது. கண்ணாடியில் படுக்கையின் பிரதிபலிப்பு வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
அதேசமயம் ஸ்டோர் ரூமில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |