Post Office திட்டம்: ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.., மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்
பொதுவாக மக்கள் தங்களின் சேமிப்புப் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
அதற்காக பலர் நல்ல சேமிப்பு திட்டங்களை தேடி வருகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும். மேலும், மாதந்தோறும் வட்டி வருமானமும் கிடைக்கும்.

இந்த திட்டம் குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஆபத்து இல்லாத நிலையான வருமானத்தை விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இதில் 5 ஆண்டுகள் காலத்திற்கு ஒருமுறை வைப்புத் தொகையை செலுத்த வேண்டும்.
அதன் பிறகு அடுத்த மாதத்திலிருந்து மாதாந்திர வட்டி வழங்கப்படும். தற்போது இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் அரசாங்க ஆதரவு பெற்ற திட்டம் என்பதால் இதில் முதலீடு செய்யப்பட்ட பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானம் பெறுவார். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு முழு வைப்புத் தொகையையும் திரும்பப் பெற முடியும்.
உதாரணமாக, ஒருவர் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதத்திற்கு சுமார் 600 ரூபாய்க்கு மேல் வட்டி கிடைக்கும்.
அதேபோல் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதத்திற்கு 3,000 ரூபாய்க்கு மேல் மற்றும் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதத்திற்கு சுமார் 5,550 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலீடு செய்து கணக்கை தொடங்கலாம்.
ஒரு தனி கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது.
5 ஆண்டுகள் முடிந்த பிறகு பணத்தை திரும்பப் பெறலாம் அல்லது மீண்டும் முதலீடு செய்யலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |