இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் - 14 வருடங்களுக்குப் பின் வருத்தப்பட்ட மிஸ்பா உல் ஹக்
2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய ஆட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் வருத்த்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஜோகிந்தர் ஷர்மாவின் பந்து வீச்சில் மிஸ்பா ஸ்கூப் ஷாட் அடித்து ஆட்டமிழக்க நூழிலையில் பாகிஸ்தான் கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக மாறிய அந்த கேட்ச் ஃபைன் லெக்கில் நின்றிருந்த ஸ்ரீசாந்தால் பிடிக்கப்பட்டது. இதனால் முதல் டி20 உலகக்கோப்பையை அப்போதைய தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
இதனிடையே அந்த தொடரில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணியினர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர் என்றும், நான் எனது பேட்டிங் திறனில் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன் என்றும் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
மேலும் ஸ்கூப் ஷாட்டை ஆடுவதில் சிறந்து விளங்கினேன் என்பதால் தான் அந்த ஷாட்டை ஆட முயற்சித்து விக்கெட்டை இழந்தேன் என வருத்தப்பட்டுள்ளார். இறுதிப்போட்டியில் என்னுடைய நம்பிக்கைக்குகந்த அந்த ஷாட் கைக்கொடுக்காமல் போனது துரதிஷ்டவசமானது என மிஸ்பா தெரிவித்துள்ளார்.