விண்வெளிக்கு செல்லும் முதல் பிரித்தானிய அழகி!
மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற இளம்பெண், விண்வெளிக்கு செல்வதற்கான தனது லட்சிய திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விண்வெளி பட்டப்படிப்பில் இங்கிலாந்து அழகி
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் Miss England பட்டத்தை ஜெசிகா ககேன் (27) வென்றார். அடுத்த ஆண்டு அவர் உலக அழகிப்போட்டியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் பயின்று வரும் ஜெசிகா வளர்ந்து வரும் ராக்கெட் விஞ்ஞானி ஆவார். இந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்வெளி வீராங்கனையாக ஜெசிகா விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் விண்வெளிக்கு செல்லும் முதல் பிரித்தானிய அழகி என்ற சாதனையை அவர் படைப்பார்.
விண்வெளி திட்டம்
இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனது பொறியியல் பட்டம் எனக்கு பல கதவுகளைத் திறக்கிறது. ஒரு நாள் எனது கனவைப் பின்பற்ற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு விண்ணப்பிக்க நம்புகிறேன். ஒரு நாள் நான் விண்வெளிக்கு செல்ல விரும்புகிறேன். நான் சரியான பாதையில் இருக்கிறேன். எனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, நான் துறையில் மூன்று ஆண்டுகள் முடிக்க வேண்டும். பின்னர் நான் விண்வெளி வீரராக ஆக விண்ணப்பிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.
தனது தந்தை தொழில்துறையில் பணிபுரிவதைப் பார்த்து, சிறு வயதில் இருந்தே பொறியாளராக வேண்டும் என்று விரும்பியதாக ஜெசிகா குறிப்பிட்டார்.