பீதியில் சுவிஸில் இருந்த என் குடும்பத்தை அழைத்தேன்! பயங்கர அனுபவங்களை பகிர்ந்த சுவிட்சர்லாந்து அழகி
ஹாலிவுட்டில் துஷ்பிரயோக வேட்டையாடும் தயாரிப்பாளர்களை எதிர்த்து போராட வேண்டும் என, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நடிகை Nadine Vinzens தெரிவித்துள்ளார்.
யார் இந்த Nadine Vinzens?
2002ஆம் ஆண்டில் சுவிஸ் அழகிப் பட்டம் வென்றவர் Nadine Vinzens (41). பின்னர் நடிகையாக மாறிய இவர் ஹாலிவுட்டில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் Nadine Vinzens ஹாலிவுட்டில் தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவங்களை விவரித்து, துஷ்பிரயோக செயல்களில் ஈடுபடும் தயாரிப்பாளர்களை எதிர்த்து போராட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
Miss Switzerland பட்டம் வென்ற Nadine Vinzens, ஜேர்மனியில் இரண்டு ஆண்டுகள் மொடலாக பணிபுரிந்தார். அதன் பின்னர் தனது நடிப்பு கனவுகளைப் பின்பற்ற 2004யில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்.
2005ஆம் ஆண்டில் வெளியான Syndicate: Zeed என்ற படத்தில் Nadine நடித்தார். அதனைத் தொடர்ந்து பல பிரபல அவர் நடிகையாக மாறினார்.
ஹாலிவுட்டில் பதுங்கியிருக்கும் பயங்கரங்கள்
Nadine 15 ஆண்டுகளாக உயர்மட்ட விருந்துகளில் கலந்துகொண்டபோது பல்வேறு பிரபலங்களை சந்தித்தார். ஆனால் கவர்ச்சியான ஹாலிவுட்டின் நிழல்களில் பதுங்கியிருக்கும் பயங்கரங்களையும் அவர் பார்த்துள்ளார்.
குறிப்பாக, ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து தப்பிய நிகழ்வை Nadine குறிப்பிட்டார். அந்த நபர் தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை எனில் உதவி செய்ய மாட்டேன் என மிரட்டி, Nadineவை துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன அவர் குளியலறைக்குள் ஓடி கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார்.
பீதியில் இருந்த அவர், சுவிட்சர்லாந்தில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து என்ன செய்வதென்று கேட்டுள்ளார்.
அப்போது Nadineவின் தோழி ஒருவர், உடனடியாக குளியலறையை விட்டு வெளியேறி, தயாரிப்பாளரிடம் இருந்தும் தப்பி செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படியே வரவேற்பறைக்கு சென்ற Nadine, தனக்கென ஒரு அறையை முன்பதிவு செய்துகொண்டார். பின்னர் அடுத்த விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல அவர் தயாராகியிருக்கிறார்.
ஹாலிவுட் அமைப்பு
அதேபோல் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு கதாபாத்திர தேர்வுக்கு சென்றுள்ளார் Nadine. அங்கு அவர் சிறப்பாக நடித்திருந்ததாக பாராட்டிய தயாரிப்பாளர், அவரை தனது வீட்டில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு Nadine தனது காதலரை அழைத்து வருவதாக கூறவே, "Partner வைத்திருக்கும் பெண்களை முன்னேற்றுவதில்லை" என்று கூறி தொலைபேசியை துண்டித்ததாக Nadine விவரித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு பேசிய Nadine, "அவர்கள் (தயாரிப்பாளர்கள்) உங்களை தொழில் ஊக்கத்துடன் கவர்ந்திழுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரும்புவது உடலுறவு மட்டுமே, வேறொன்றுமில்லை. நிறைய நட்சத்திரங்கள் இதை செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று இந்த ஆண்களுக்குத் தெரியும். நோய்வாய்ப்பட்ட ஹாலிவுட் அமைப்பு இந்த நடைமுறைகளை மூடிமறைக்கிறது.
தொழில் வாய்ப்புகளுக்கான உடலுறவு என்று இந்த அமைப்பு இன்றுவரை இருக்கிறது மற்றும் தொடர்ந்து இருக்கும் என்பதை நான் அறிவேன். அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் வக்கிரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அவர்களைத் தூண்டிவிடுகிற ஒவ்வொரு பெண்ணுக்கும் இது என்னை மிகவும் நன்றியுள்ளவளாக ஆக்குகிறது" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |