பிரித்தானிய மகாராணியை விட பணக்கார பெண்! ரகசியமாக விவாகரத்து.., தெரியவந்த மலைக்க வைக்கும் தகவல்கள்
பிரித்தானிய அழகி மற்றும் பிரபல பாடகியான கிர்ஸ்டி பெர்டரெல்லி பிரித்தானியாவின் பணக்கார விவாகரத்து பெற்றவராக மாறிவிட்டார்.
பிரித்தானியவாவின் ஸ்டாஃபோர்ட்ஷயர் மாகாணத்தில் பிறந்த கிர்ஸ்டி, 1988-ஆம் ஆண்டு Miss UK பட்டம்பெற்றார். அதன்பிறகு லண்டனுக்கு குடியேறிய அவர், பாடகராகவும், பாடலாசிரியராகவும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.
அவர் 2000-ல் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபரான Ernesto Bertarelli-ஐ திருமணம் செய்து கொண்டார். Ernesto உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்த நிலையில், அவரை திருமணம் செய்துகொண்ட கிர்ஸ்டி பெர்டரெல்லி பிரித்தானியாவிலேயே பணக்கார பெண்ணாக மாறினார்.
Photo: Rex Features
பிரித்தானிய மகாராணியின் தனிப்பட்ட சொத்துமதிப்பை விட இவரது சொத்துமதிப்பு அதிகமாக இருந்தது.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கிர்ஸ்டி பெர்டரெல்லி-க்கு தற்போது 50 வயது ஆகிறது.
சமீபத்தில் இந்த தம்பதியின் 21-வது திருமண நாள் விழா உலகமே வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தம்பதி தங்களது 21 வருட திருமண வாழ்க்கையை சமீபத்தில் முடித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், கிர்ஸ்டி பெர்டரெல்லி மற்றும் எர்னஸ்டோ இருவரும் விவாகரத்து செய்ததாக மிகவும் வருத்தத்துடன் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். இந்த முடிவை ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே எடுத்துவிட்டதாக அவர்களை அறிவித்தனர்.
Credit: Getty Images
இந்த ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான உலக பணக்கார்கள் பட்டியலில், இருவரது பெயரும் 14-வது இடத்தில் இருந்தது. அவர்களது சொத்துமதிப்பு 9.2 பில்லியன் பவுண்டுகள், இது பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர் விவாகரத்து பெற்றதற்கு என்ரெஸ்ட்டோவிடம் இருந்து பெரும் செட்டில்மண்ட் தொகை 350 மில்லியன் பவுண்டுகள் என அறியப்படுகிறது. இதன்முலம் கிர்ஸ்டி பெர்டரெல்லி பிரித்தானியாவின் பணக்கார விவாகரத்து பெற்றவராக மாறிவிட்டார்.
தற்போது, பிரித்தானிய மாகாராணி இரண்டாம் எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பே 365 மில்லியன் பவுண்டுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அவர் பாடகர் என்ற அடிப்படையில், பாப் இசைக்கலைஞர்களிலேயே மிகவும் பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெறுகிறார்.