பிரித்தானியா சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம்பெண்: சந்தித்த பயங்கர அனுபவம்

United Kingdom
By Balamanuvelan Jun 06, 2022 11:50 AM GMT
Report

பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரித்தானியா சார்பில் இந்திய இளம்பெண் ஒருவர் போட்டியிட தயாராகி வருகிறார்.

Cheshireஇல் வாழும் அவரது பெயர் ரஜ்னி (Rajnie Kaur Uppal, 25).

பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் முன் கம்பீர நடை பயில இருக்கும் ரஜ்னி, சிறிது காலம் முன் வரை வீட்டிற்குள்ளேயே பயந்து பதுங்கிக் கிடந்தவர் என்றால் நம்பமுடியுமா?

ஆம், ரஜ்னியை அவரது தோழி ஒருவரின் ஆண் நண்பர் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் மிகவும் தொந்தரவு செய்தாராம். பயந்துபோய் ஆறு மாதங்களில் மூன்று முறை வீடு மாற்றிக்கொண்டு ஓடிகொண்டே இருந்த ரஜ்னி, வீட்டை விட்டு வெளியே வராமல் தனது படுக்கையறைக்குள்ளேயே அடைந்து கிடந்திருக்கிறார்.

பிரித்தானியா சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம்பெண்: சந்தித்த பயங்கர அனுபவம் | Miss Universe Hopeful Harassment Terrified

அப்படி, வீட்டுக்குள்ளேயே பயந்து பதுங்கிக் கிடக்கும்போதுதான் கவிதைகள் எழுதத் துவங்கியுள்ளார் அவர். சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அவரது முதல் கவிதைக்கே உடனடியாக பெரும் வரவேற்புக் கிடைத்திருக்கிறது.

அதனால், தைரியமான ஒரு பெண்கள் கூட்டம் தன்னுடன் இருக்கிறது என்னும் உற்சாகமும், தைரியமும் கிடைக்க, தொடர்ந்து கவிதைகள் எழுதுவதோடு, மறைந்து கிடந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்த ரஜ்னி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு ஆதரவாக சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்.

என்றாலும், இப்போதைய அவரது இலக்கு, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் கவனம் செலுத்துவது.

பிரித்தானியா சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம்பெண்: சந்தித்த பயங்கர அனுபவம் | Miss Universe Hopeful Harassment Terrified

ஒரு பஞ்சாபி சீக்கியப் பெண்ணாக, வெள்ளையர் அல்லாத பெண்கள் சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்பதற்காக தான் பெருமிதம் கொள்வதாக தெரிவிக்கும் ரஜ்னி, இதுவரை பிரித்தானியா சார்பில் எந்த இந்தியப் பெண்ணும் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதில்லை என்கிறார்.

தான் தேர்வு செய்யப்பட்டால், தனக்கு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் என்னும் கௌரவம் கிடைக்கும் என்கிறார் ரஜ்னி.

இன்னொரு பக்கம், அவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அவரை இதுவரை தொந்தரவு செய்த நபர், அவர் இதற்குமுன் பதுங்கியிருந்ததுபோல, அவரது புகழை பதுங்கியிருந்துதான் வேடிக்கை பார்க்கவேண்டியிருக்கும், women power!  

பிரித்தானியா சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம்பெண்: சந்தித்த பயங்கர அனுபவம் | Miss Universe Hopeful Harassment Terrified

பிரித்தானியா சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம்பெண்: சந்தித்த பயங்கர அனுபவம் | Miss Universe Hopeful Harassment Terrified

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US