60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க அழகி!
அமெரிக்கா பட்டம் பெற்ற ஜாஸ்லி ரிஸ்ட் (30) 60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் - ஜாஸ்லி ரிஸ்ட் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து 9-வது மாடியில் உள்ள பிளாட்டில் வசித்து வந்தார்.
மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்த இவர் 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர் .
இந்நிலையில் இன்று தான் வசித்துவந்த 60 மாடி கட்டிடத்தில் இருந்து கிழே குதித்து திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடைசியாக 29-வது மாடியில் நின்றுகொண்டிருந்தபோது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளார். அதன்பின்னர் அவர் எந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகவில்லை என கூறப்படுகின்றது.
இதனால், அவர் கட்டிடத்தின் 29-வது மாடியில் இருந்தே கிழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜாஸ்லி ரிஸ்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த தற்கொலை தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.