சுவிஸ் கப்பல் மீதும் ஏவுகணைத் தாக்குதல்: ஹவுதி அமைப்பினர் அட்டகாசம்
ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களான ஹவுதி அமைப்பினர், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது அவ்வப்போது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
தற்போது, சுவிஸ் சரக்குக் கப்பலொன்றின் மீதும் ஹவுதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
சுவிஸ் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்
சவ்தி அரேபியாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சுவிஸ் கப்பல் நிறுவனமான MSC நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஹவுதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்தக் கப்பல் செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
Photo courtesy MSC
யாருக்கும் பாதிப்பில்லை
கப்பலில் பயணித்த பணியாளர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என MSC நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், கப்பலுக்கு எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் ஹவுதி அமைப்பால் தாக்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், இனி செங்கடல் வழியாக பயணிப்பது ஆபத்து என்றும், ஆகவே அந்த வழியாக அனைத்து பயணங்களையும் நிறுத்துவதாகவும் MSC நிறுவனம் தெரிவித்திருந்தது.
அப்படியிருக்கும்போது, ஏன் மீண்டும் அந்த கப்பல் செங்கடல் பாதையில் பயணித்தது என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |