சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்!
சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது வெற்றிகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியாக ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுத்தி போராளிகள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் ஜெட்டா நகரில் உள்ள விமானநிலையத்தல் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் நாட்டில் உள்ள மற்ற விமானநிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது வரை சவுதி தரப்பில் இருந்து இந்த தாக்குதல் உறுதிப்படுத்தப்படவில்லை.
القوة الصاروخية تتمكن بفضل الله من إستهداف شركة أرامكو السعودية في جده فجر اليوم بصاروخ مجنح نوع قدس2 وكانت الإصابة دقيقة بفضل الله
— العميد يحيى سريع (@army21ye) March 4, 2021
يأتي هذا الاستهداف في اطار الرد الطبيعي والمشروع على استمرار الحصار الغاشم والعدوان على شعبنا العزيز pic.twitter.com/oTiL0xk2v6
சில வாரங்களுக்கு முன் ஹவுத்தி மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்க ரத்து செய்தது, மேலும் இனி ஹவுத்திகள் பயங்கரவாதிகள் அல்ல என்று கூறியது நினைவுக் கூரத்தக்கது.