பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை
Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன 13 வயது சிறுமி
கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை போல்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமி லில்லியா(Lillia) தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து காணாமல் போனார்.
கடந்த ஒரு வார காலமாக காணாமல் போன 13 வயது சிறுமி லில்லியை கண்டுபிடிக்கும் முயற்சியில் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

பல மணி நேர தீவிர சிசிடிவி ஆய்வுக்கு பிறகு செப்டம்பர் 14ம் திகதி காலை 10.36 மணிக்கு தேடப்பட்டு வரும் சிறுமி லில்லியா மான்செஸ்டர் பிக்காடில்லி(Piccadilly) பேருந்து நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் அவர் சால்போர்ட் நகருக்கான நம்பர் 36 பேருந்தில் ஏறிய லில்லியா, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சில நிமிடத்தில் கேமராவில் பதிவாகியுள்ளார்.

இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ள காவல்துறை, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய லில்லி எந்த திசையில் சென்றார் அல்லது அவரை பற்றி வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
புதிதாக வெளியான சிசிடிவி காட்சிகளில், காணாமல் போன லில்லி முதுப்பையுடன் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததும், தலையில் ஹூடி அணிந்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.