பிரித்தானியாவில் காணாமல் போன 92 வயது முதியவர்: உடல் உறுதிப்படுத்திய பொலிஸார்!
பிரித்தானியாவின் க்வினெட்(Gwynedd) பிராந்தியத்தில் காணாமல் போன 92 வயது முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன முதியவர் உடல் கண்டுபிடிப்பு
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29 அன்று கிரிசித்(Criccieth) பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கண்டுபிடிக்கப்பட்ட நபரின் ஒருவரின் உடல், காணாமல் போன 92 வயது முதியவர் வில்லியம் என்பவரது உடல் என்பதை வடக்கு வேல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வில்லியம் கடைசியாக கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை கேர்னார்ஃபோன்(Caernarfon) இருந்து கிரிசித்(Criccieth) நோக்கி பேருந்தில் பயணம் செய்த போது பார்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் அறிக்கை
வெளியான அறிக்கையில் பொலிஸ் செய்தித் தொடர்பாளர், வில்லியத்தின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
"இந்த கடினமான சூழ்நிலையில் வில்லியத்தின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் "அவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும்” அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |