நீண்ட 12 நாட்கள்... வெளிநாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்
ஸ்பெயினின் மஜோர்கா தீவில் மாயமான பிரித்தானிய இளைஞர் தொடர்பில் அவரது குடும்பத்தினர் திகைக்க வைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவத்திற்கு இலக்காக
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 26 வயது Ben Ross என்பவர் மஜோர்கா தீவில் மாயமான நிலையில், நீண்ட 12 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி சட்டத்தரணியான பென் ரோஸ் விடுமுறையை கொண்டாடும் வகையில் பால்மா சிட்டிக்கு சென்றுள்ளார். ஆனால், உள்ளூர் கடற்கரை ஒன்றில் அவர் கொள்ளை சம்பவத்திற்கு இலக்காக, பணம், அலைபேசி என மொத்தமும் இழந்த நிலையில், இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டார்.
ஜூலை 10ம் திகதி முதல் எந்த தகவலும் அவர் தொடர்பில் வெளிவராத நிலையில், மிக மோசமான கட்டத்தில் அவர் பால்மா சிட்டியில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரகத்திற்கு உதவி நாடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் நிம்மதியடைந்துள்ளோம்
பென் ரோஸ் நீண்ட 12 நாட்களுக்கு பின்னர் உயிருடன் திரும்பியுள்ள தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட, அவரது தாயார் உருக்கமான அறிக்கை ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இதுவரை நாங்கள் பெற்ற அனைத்து உதவிகளுக்கும் ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவரைக் கண்டுபிடித்ததில் நாங்கள் மிகவும் நிம்மதியடைந்துள்ளோம்,
இப்போது அவரை முழு உடல்நிலை மற்றும் பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |