ருமேனியாவில் காணாமல் போன பிரித்தானிய மாணவர்: மீட்கப்பட்ட உடல்: தேடுதல் பணி முடிவு
ருமேனியாவில் காணாமல் போன பிரித்தானிய மாணவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பிரித்தானிய மாணவர்
கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் ருமேனியாவில் பிரிக்பால் பல்கலைக்கழகத்தின் 18 வயது புவியியல் மாணவர் ஜார்ஜ் ஸ்மித்(George Smyth) என்பவர் தனியாக மலையேறச் சென்ற நிலையில் காணாமல் போனார்.
பிரான் கோட்டைக்கு செல்லும் பாதையில் புசெகி(Bucegi) மலைப்பகுதி அருகே தனியாக மலையேறச் சென்ற போது ஜார்ஜ் ஸ்மித் காணாமல் போனது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து 6562 அடி உயரத்திற்கு மேல் உள்ள டிகானெஸ்டி பள்ளத்தாக்கை அடைந்த அவர் சோர்வு மற்றும் உடல் சூடு காரணமாக அவசர எண்ணான 112 க்கு அழைப்பு விடுத்து உதவி கோரியுள்ளார்.
சம்பவ இடத்தை மீட்பு படையினர் அடைந்த போது அங்கு அவரது பை மட்டும் கண்டெடுக்கப்பட்டது.
உடல் மீட்பு மற்றும் தேடுதல் பணி நிறைவு
இந்நிலையில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த உள்ளூர் மீட்பு படையினர் ஜார்ஜ் ஸ்மித் உடலை கண்டறிந்துள்ளனர்.
முறையான அடையாளம் காணுதல் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், உடல் ஜார்ஜ் ஸ்மித்தினுடையது என்று நம்பப்படுகிறது.
தற்போது சிறுவனின் குடும்பத்தினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு அவசர உதவிகளை ஏவோன் மற்றும் சோமர்செட் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |