தூங்கி எழுந்த போது என் 15 வயது மகளை காணவில்லை! கனேடிய தாயார் கண்ணீர்
கனடாவில் 15 வயது டீன் ஏஜ் சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் அவர் தாயார் உருக்கமாக பேசியுள்ளார்.
கனடாவின் லண்டனை சேர்ந்தவர் அலெக்ஸிஸ் ஹாரீஸ் (15) இவர் தான் புத்தாண்டு தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரை பொலிசார் தொடர்ந்து தேடி வரும் நிலையில் பொதுமக்களும் அது தொடர்பில் உதவ வேண்டும் என கோரியுள்ளனர்.
அலெக்ஸிஸ் குறித்து பேசிய அவர் தாயார் மேஜோரி, புத்தாண்டு தினத்தில் காலை 7 மணிக்கு தூங்கி எழுந்த போது என் மகள் வீட்டில் இருந்து மாயமானது தெரியவந்தது.
அவள் பாதுகாப்பு குறித்து கவலையாக உள்ளது. கடந்த காலங்களிலும் அலெக்ஸிஸ் காணாமல் போயிருக்கிறார், ஆனால் அப்போது குடும்பத்தாரை தொலைபேசி அல்லது சமூகவலைதளம் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால் இப்போது தான் எங்களை அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.
தினமும் அவள் சமூகவலைதள பக்கத்தை பார்த்து வருகிறோம் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.