காணாமல் போன பல்கலைக்கழக மாணவி... காவல்துறை கண்டுபிடித்த நெஞ்சை உலுக்கும் காட்சி
கொலை வழக்கில் தனது காதலனின் அறைத்தோழர் கைது செய்யப்பட்ட நிலையில், காணாமல் போன முனைவர் பட்ட மாணவியைத் தேடும் பணியில் காவல்துறையினர் மனதை நொறுக்கும் காட்சி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
மனித உடற்பாகங்கள்
கொல்லப்பட்ட அவரது காதலனின் அறைத்தோழர், அவர்கள் இருவரையும் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்., புளோரிடா கடற்பகுதியில் நெஞ்சைப் பிழியும் ஒரு காட்சியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

27 வயதான முனைவர் பட்ட மாணவி நஹிதா பிரிஸ்டியைத் தேடி நகரம் முழுவதும் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது, டாம்பாவிற்கு அருகிலுள்ள நீர்வழிகளில் மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பிரிஸ்டியின் காதலர் 27 வயதான ஜாமில் லிமோனின் உடல், வெள்ளிக்கிழமையன்று ஹாவர்ட் ஃபிராங்க்லேண்ட் பாலத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
ஏப்ரல் 16 அன்று அந்தத் தம்பதி காணாமல் போனது தொடர்பாக, அதே நாளில் அவருடைய அறைத்தோழரான ஹிஷாம் அபுஹார்பியா கைது செய்யப்பட்டார்.
26 வயதான அபுஹார்பியே மீது, கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தி திட்டமிட்ட கொலை செய்ததாக இரண்டு முதல் நிலை குற்றச்சாட்டுகள், சடலத்தை சட்டவிரோதமாக வைத்திருத்தல் அல்லது இடமாற்றம் செய்தல்,
அதிகாரிகளிடம் ஒரு மரணம் குறித்துத் தெரிவிக்கத் தவறுதல் ஆகியவற்றுடன், மேலும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. புளோரிடா பல்கலைக்கழகத்தில் 2021 முதல் 2023 வரையில் கல்வி பயின்றவர் இந்த அபுஹார்பியா.
ஒரு சடலத்தை முறையாக எப்படி அகற்றுவது என்பது குறித்து ChatGPT-யிடம் கேள்விகள் கேட்டுள்ளார். மட்டுமின்றி, ஒரு மனிதரை ஒரு கருப்பு குப்பைப்பையில் அடைத்து, ஒரு பெரிய குப்பைத்தொட்டியில் வீசினால் என்ன நடக்கும்? என்றும் வினவியுள்ளார்.

சனிக்கிழமையன்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில், அபுஹர்பியே லிமோனுடன் பகிர்ந்துகொண்ட குடியிருப்பில், விசாரணை அதிகாரிகள் இரத்தக் கறை படிந்த ஆடைகளையும் இரத்தத் தடயங்களையும் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தத் தம்பதி காணாமல் போவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு காரின் VIN எண்ணை மாற்றுவது குறித்தும், உரிமம் பெற்று வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க முடியுமா என்பது குறித்தும் அபுஹார்பியே ChatGPT-யிடம் கேள்விகள் கேட்டதாகக் கூறப்படுகிறது.
திருமணம் செய்து கொள்ளும்
லிமோனின் உடல் நிர்வாணமாகவும், உடல் முழுவதும் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டது. தற்போது பிரிஸ்டியின் உடல் எந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர். ஆனால் கோரமான நிலையில் கனெடுக்கப்பட்டுள்ளதாக மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.
லிமோன் மற்றும் பிரிஸ்டி ஆகிய இருவருக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள். லிமோன் மற்றும் பிரிஸ்டி ஆகிய இருவரும் காதலித்து வந்ததுடன், கல்வி முடித்து நாட்டுக்குத் திரும்பியதும் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் காணாமல் போனபோது, அவர்கள் ஒன்றாக இல்லை என்றே பிரிஸ்டியின் மூத்த சகோதரர் தெரிவித்துள்ளார். லிமோன் புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கொள்கை ஆகியவற்றைப் படித்துக்கொண்டிருந்தார்.
பிரிஸ்டி ஒரு வேதியியல் பொறியியல் மாணவி; அவர் பல்கலை வளாகத்திலேயே வசித்து வந்தார். இருவரும் தங்கள் முதுகலை படிப்பைத் தொடர்வதற்காக அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு, வங்கதேசத்திலேயே தங்கள் இளங்கலை பட்டங்களைப் பெற்றிருந்தனர்; மேலும் அவர்கள் மாணவர் விசாக்களின் கீழ் அங்கு தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |