ஐந்து ஜேர்மானியர்களுடன் புறப்பட்ட விமானம் மாயம்: ஜேர்மன் பிரபலம் பயணித்ததாக தகவல்...
*மெக்சிகோவிலிருந்து கோஸ்ட்டா ரிக்கா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
*அந்த விமானத்தின் ஜேர்மன் பிரபலம் ஒருவரும் பயணித்துள்ளார்.
ஐந்து ஜேர்மானியர்களுடன் மெக்சிகோவிலிருந்து கோஸ்ட்டா ரிக்காவிலுள்ள Limon விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக கோஸ்ட்டா ரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த விமானத்தில்,ஜேர்மனியிலேயே பெரிய பிட்னஸ் ஸ்டுடியோவான McFit என்னும் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகிய Rainer Schaller, அவரது துணைவியான Christiane Schikorsky மற்றும் அவரது பிள்ளைகள் பயணித்துள்ளார்கள்.
நேற்று மாலை அந்த விமானம் மாயமான நிலையில், மோசமான வானிலை காரணமாக விமானத்தைத் தேடும் பணி தடைபட்டது.
Rainer Schaller குடும்பத்தின் நிலை என்ன என தெரியவில்லை என McFit நிறுவன செய்தித்தொடர்பாளரான Jeanine Minaty தெரிவித்துள்ளார்.