பிரித்தானியாவில் மாயமான கேரள இளம்பெண்... கிடைத்துள்ள துயரச் செய்தி
பிரித்தானியாவுக்குக் கல்வி கற்பதற்காகச் சென்ற கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இம்மாத துவக்கத்தில் மாயமானார்.
இந்நிலையில், தற்போது, அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
பிரித்தானியாவில் மாயமான கேரள இளம்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாண்ட்ரா எலிசபெத் சாஜு (22).
கொல்லஞ்சேரி என்னுமிடத்தைச் சேர்ந்த சாண்ட்ரா, ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பர்கிலுள்ள Heriot-Watt பல்கலையில் கல்வி பயின்றுவந்துள்ளார்.
இம்மாதம், அதாவது டிசம்பர் மாதம் 6ஆம் திகதி, மணி 9.10க்கும் 9.45க்கும் இடையில், எடின்பர்கிலுள்ள லிவிங்ஸ்டன் என்னுமிடத்திலுள்ள Asda பல்பொருள் அங்காடியில் கடைசியாக காணப்பட்டுள்ளார் சாண்ட்ரா. அதற்குப் பின் சாண்ட்ராவைக் காணவில்லை.
கிடைத்துள்ள துயரச் செய்தி
இந்நிலையில், எடின்பர்கிலுள்ள நியூபிரிட்ஜ் என்னும் கிராமத்திலுள்ள ஆல்மண்ட் நதியில் சாண்ட்ராவின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாண்ட்ராவின் குடும்பத்தினருக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாண்ட்ராவின் உடலை முறைப்படி அடையாளம் காணும் பணி துவக்கப்பட உள்ளது.
சாண்ட்ராவின் மரணத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |